இழுபறி நிலையிலுள்ள கல்முனை நிர்வாக அலகு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்
நோக்கிலான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (31) பாராளுமன்ற குழு அறையில்
நடைபெற்றது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், அலிஸாஹிர்
மௌலானா, ஏ.எல்.எம். நசீர், மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், செயலாளர் நிஸாம்
காரியப்பர், கல்முனை மேயர் ரகீப், மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது
சுயேற்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம்.
ஹனீபா, கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை, சாய்ந்தமருது,
மருதமுனை, நற்பிட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment