சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினையொட்டி, காணாமல் போனோரின்
முஸ்லிம் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் பேரணியும்
ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று (30) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
மனித எழுச்சி நிறுவனத்துடன் இணைந்து இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப்
பேரணியின் போது, காணாமல் போன முஸ்லிம் உறவினர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய
பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதி
வழியாக ஊர்வலமாகச் சென்று மனித எழுச்சி நிறுவனத்தின் அலுவலகத்தினை
சென்றடைந்தனர்.


0 comments:
Post a Comment