இன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள
மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்பட
வெ.பிட்டி பொலிஸ் ஓ.ஐ.சி மற்றும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஏற்பாடு
மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் இர்ஃபான்.
ஜும்மா விற்கும் பிறகு பேசிய மாகாண சபை உறுப்பினர் கூறிய கருத்தில்
முக்கியமானதும் சிந்தித்து அவசரமாக சீர்த் திருத்த வேண்டிய விடயம்....
அவர் கூறினார்-
//பிரசங்கள் தமிழில் இருப்பதனால் நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
அதனால்
பிரசங்கம் அனேகமாக ஆக்ரோசமாக
ஆவேசமாக
கோபமாக
கேட்பதால்
அது
பள்ளிகளில் ஆவேசத்தையும்
வெறுப்புணர்வையும் போதிப்பதாகவே நமது மக்கள் நினைக்கின்றனர்.
இன்று நமது மொழியில் நிகழ்த்தப்பட்டதனால் புரிகிறது எமது எண்ணம் தவறு என்பது.....//
இங்கு நம் ஆலிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் தான் இது.
சிங்களத்தில் பிரசங்கம் நிகழ்த்துவதல்ல...
சாந்த குரலில் அழகாக பிரசங்கம் நிகழ்த்த பழகவேண்டும் என்பதே.
Mafahir Maulana


0 comments:
Post a Comment