ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித்
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஐக்கிய தேசிய முன்னணியின்
தலைவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா
தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன்,
பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின்
தலைவர்கள், சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவை வழங்கி விருப்பம்
தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதித்
தேர்தலுக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் உடன்பாட்டை
ஏற்படுத்திய பின்னர், ரணில் - சஜித் இணைந்து எதிர்வஐம் ஜனாதிபதித்
தேர்தலில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹர்ச டி சில்வா
குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில்
ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல்
கட்சிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment