• Latest News

    August 11, 2019

    நாட்டிற்கு சிறந்ததொரு தலைமையை வேண்டி பிராத்தினை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    தியாகப் பெருநாளாகிய ஹஜ்ஜுப்  பெருநாள் வாழ்த்துக்களை தொிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சமூகத்தின் நிம்மதிக்கும், ஒற்றுமைக்கும் அல்லாஹ் அருள் புாிய வேண்டுமென்று  பிராத்திக்கிறேன். முஸ்லிம்களின் அரசியலையும், பொருளாதாரத்தையும், ஒற்றுமையையும் குழைத்து விடுவதற்கு போினவாதிகள் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால், முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
    இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
    இப்றாகிம் நபி (அலை) அவர்கள் செய்த தியாகத்தினை நினைவு கூறும் விதமாக ஹஜ்ஜுப் பெருநாளை நாம் கொண்டாடுகிறோம். சோதனைகளை சந்திக்காது வெற்றிகளை அடைந்து கொள்ள முடியாதென்பதற்கு இப்றாகிம் நபி(அலை) அவர்கள் நல்லதொரு உதாரணமாக இருக்கிறார்கள். ஆதலால், இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், சோதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக போினவாதிகள் முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த குறுகிய சிந்தனைகளிலிருந்து எடது சமூகத்தை அல்லாஹ்விம் பாதுகாப்பு தேட வேண்டும். 
    மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்திற்கு பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த அரசியல் தலைமை ஒன்று மீண்டும் உருவாகிவிடக் கூடாதென்று போினவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால், முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமையை உருவாக்கித் தருமாறும், அவருக்கு ஈமானையும், தைாியத்தையும் கொடுக்குமாறு அல்லாஹ்வை பிராத்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
    எமது உலமாக்களையும், அவர்களின் தலைமையையும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். உலமாக்களை பயங்கரவாதிகள் போன்று சித்தாித்துக் கொண்டிருகிறார்கள்.
    இவ்வாறு முஸ்லிம் சமூகத்தினை எல்லா வழிகளிலும் நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் வழிகாட்டல்கள் உள்ளன. ஆதலால், முஸ்லிம்களை அனைவரும் தொழுது நாட்டிற்கு சிறந்ததொரு தலைவர் எதிர் காலத்தில் தொிவு செய்யப்படுவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களின் ஆளுமையை மேலும் விருத்தி செய்வதற்கும் துஆ செய்வது நம் அனைவரும் மீதும் கடமையாகும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டிற்கு சிறந்ததொரு தலைமையை வேண்டி பிராத்தினை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top