ஐக்கிய தேசிய கட்சி தமக்கு எதிராக எடுக்கவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை
தொடர்பில் தமக்கு அச்சமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ
ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவும்
என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
எனினும் தமக்கு அது குறித்த எழுத்து மூல அறிவுறுத்தல்கள் எவையும் இதுவரையில்
கிடைக்கப்பெறவில்லை என்று அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது பெரிய விடயம்
இல்லை எனவும், அது ஒரு உபாயம் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment