• Latest News

    August 30, 2019

    செப்டெம்பர் 15ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோர முடியும் மஹிந்த தேசப்பிரிய

    அடுத்த மாதம் 15ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
    அரச தொலைக்காட்சி சேவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    உலக ஜனநாயக தினமான செப்டெம்பர் மாதம் 15ம் திகதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: செப்டெம்பர் 15ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோர முடியும் மஹிந்த தேசப்பிரிய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top