• Latest News

    September 22, 2019

    ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் 09 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது

    ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது பொதுக்குழு இன்று 22.09.19 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.  இதன்போது 09 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு
    1) ஏப்ரல் 21 ஈஸ்டர் அன்று தீவிரவாதிகளால் மேற்கோள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிறகு எந்த காரணமும் இல்லாமல் அநியாயமான முறையில் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள் அதில் சிலர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சில அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளார்கள் அவர்கள் குறித்து விசாரணையை துரிதப்படுத்தி எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத பட்சத்தில் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
    2) அதே போன்று ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டரிந்து அவர்கள் யாராக இருந்தாலும் எந்த தராதரமும் பார்க்காமல் அவர்களுக்கு உச்சகட்ட தண்டனையை அரசு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
    3) இலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதிகள் இஸ்லாம் என்பது மனிதனை கொல்ல சொல்கின்ற மார்க்கம் என்ற தவறான சிந்தனை முஸ்லீம் அல்லாத மக்களிடம் ஏற்பட்டுள்ளதனால் அதை துடைத்து எறிய வேண்டிய கடமை எம் மீது உள்ளது இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் பிறறுக்கு நலவை நாட சொல்லும் மார்க்கம் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்பதை இலங்கை வாழ் எம் தொப்புல் கொடி உறவுகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக முதல் கட்டமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எமது கிளைகள் உள்ள இடங்களில் தீவிரவாத்திற்கு எதிராக 40 நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்யப்படும் என்பதை இப்பொதுக் குழு முடிவெடுள்ளது,
    4) ஏப்ரல் 21 நடந்த தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்களின் சில பள்ளி வாசல்கள் எந்த காரணமும் இல்லாமல் அன்றாட கடமையான வணக்கங்களை நிறைவேற்ற தடுக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது அதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்து உள்ளாகி இருக்கின்றார்கள் அந்த பள்ளிகள் தீவிரவாதத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை என்று நிறுபனமான பிறகும் பள்ளிவாசல்கள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருப்பது சட்ட விரோதமானது என்பதனால் இலங்கை அரசு இந்த விசயத்தில் கவனமெடுத்து அந்த பள்ளிகளை திறக்க அனுமதி கொடுமாறு அந்த பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்துமாறு அரசைப் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது
    5) ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்களின் மீது வேண்மென்று இனவாதிகளினால் குளியாப்பிடி, கொட்டரமுள்ள, நாத்தான்டி, மினுவங்கொட, ஹெட்டிபொல, சிலாபம் போன்ற முஸ்லீம்கள் வசிக்கக்கூடிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கடைகள் ஹோட்டல்கள் வீடுகள் பள்ளிவாசல்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டது சில பகுதிகளில் தீ வைக்கப்பட்டது இதனால் முஸ்லிம்களின் பெரும சொத்துகள் சேதமாக்கப்பட்டது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கான நஷ்ட ஈடுகள் இது வரை ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவே அரசு இந்த விடயத்தில் துரிதப்படுத்தி நஷ்ட ஈடுகளை வழங்குமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. 
    6) இலங்கையில் காலத்துக்கு காலம் இஸ்லாத்துக்கும் , குர்ஆனுக்கும் எதிரான விசமக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து மக்களுக்கு மத்தியில் தங்களை பிரபல்யப்படுத்த சிலர் நினைக்கின்றார்கள் அந்த வகையில் யார் இஸ்லாத்துக்கும் , குர்ஆனுக்கும் எதிராக பேசினாலும் அவர்களை சட்ட ரீதியாக அனுகுவதோடு கருத்தியல் ரீதியாக அவர்களின் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் விவாதகளத்தில் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நாங்கள் என்றும் தயாராகவே இருக்கிறோம் என்பதை இந்த பொதுக்குழு வாயிலாக அறிவித்துக் கொள்கிறோம்,
    7) எமது இலங்கை நாட்டில் பல அரச நிறுவனங்களில் மக்களின் சொத்துக்களை ஊழல் செய்வதில் அரச அதிகாரிகள் மற்றும் அரச பீடத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முன்னிலைவகிக்கின்றார்கள் மக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கின்ற யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டுமென்று இலங்கை அரசுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பொதுக்குழு வேண்டுகோல் விடுகின்றது
    8) ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் ஆகும் இலங்கையில் சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களே தவிற இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் மிக அதிகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற விடயத்தில் கவனம் எடுத்து அதை ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளது. ஆகவே சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச தண்டனையை வழங்க வேண்மென்று இந்த பொதுக்குழு அரசை கேட்டுக்கொள்கிறது
    9) எதிர்வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களுக்கு எந்த தரப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசாங்கம் அமையும் என்பதை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூடி நல்ல ஒரு முடிவை அறிவிக்க வேண்மென்றும் அதில் எல்லா முஸ்லீம்களும் ஒன்றினைந்து அந்த முடிவுக்கு உங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு எம்முடைய வாக்குகளை வழங்க வேண்டுமென்று இப்பொதுக்குழு அனைத்து முஸ்லீம் மக்களையும் கேட்டுக் கொள்கிறது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் 09 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top