தவிசாளர்
எம்.எஸ்.அப்துல் வாஸீத் தெரிவித்தார்.
பொத்துவில் மண்மேட்டு தொல்பொருள் பிரதேசம் தொடர்பில்
அண்மைக்காலமாக
முன்வைக்கப்பட்டுவரும் இனவாதக் கருத்துக்கள் குறித்து
விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை
பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு
விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்து
தெரிவிக்கையில், எமது நாட்டில் அமைந்துள்ள தொல்பொருள் புராதன
அடையாளச் சின்னங்கள் இந்த நாட்டின் முக்கிய பொக்கிஷங்களாகும்.
அதனைப் பாதுகாப்பது ஒரு சமூகத்தினரது கடமை மாத்திரமல்லாது
அனைத்து இனத்தவரினதும் கடமையும், பொறுப்புமாகவுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான மண்மேட்டுக் காணியில்
சட்டவிரோதமான முறையில் அத்துமீறியே முகுது மஹாவிகாரை
அமைக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது அங்குள்ள விகாரதிபதி
இன்று பொத்துவில் பிரதேச முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை
சமூகத்தின் மத்தியில் பொய்யான இனவாதக் கருத்துக்களைப் பரப்பி
இனநல்லுறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவது வேதனைக்குரிய
விடயமாகும்.
1952 ஆம் ஆண்டு முதல் இந்த மண்மேடு 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்
பெற்றிருந்ததுடன், இப்பிரதேசம் தொல்பொருள்
திணைக்களத்திற்குரியது என அறிவித்தல் செய்யப்பட்டிருந்தது.
இப்பிரதேசம் பொத்துவில் பிரதேச
மக்களும், ஏனைய சுற்றுலாப்
பயணிகளும் நாளாந்தம் வருகை தந்து
பார்வையிட்டுச் செல்லும் முக்கிய
இடமாகவும் இருந்து வந்த நிலையில், பொத்துவில் பிரதேச செயலகத்தின்
அனுமதியுடன் அரை ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டு அங்கு முகுது மகா
விஹாரை அமைக்கப்பட்டது. மஹிந்த
ஆட்சியில் பிரதேச செயலகத்திற்கு
அழுத்தம் வழங்கப்பட்டு இது 3 ஏக்கராக அதிகரிக்கப்பட்டு அங்கு
மிகவும் பிரமாண்டமான விகாரையும் அமையப்பெற்றுள்ளது.
இப்புராதன பிரதேசத்தை அடையாளம் காட்டியடிவர் முஸ்லிம் ஒருவரே.
அதற்காக அவருக்குப் பரிசாக அங்கு காவலாளி வேலையும்
வழங்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கடந்த பயங்கரவாத
யுத்த காலங்களிலும் அங்குள்ள புராதன அடையாளச் சின்னங்களையும்,
பிரதேசத்தையும் பாதுகாத்தவர்கள் முஸ்லிம் மக்களே. இதனை மறந்து
பல்வேறுபட்ட இனவாதக் கருத்துக்களைப் பரப்பி பொத்துவில்
பிரதேசத்தில் நீண்ட காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மூவின
சமூகங்கள் மத்தியில்
முரண்பாட்டையும், பிரச்சினைகளையும்
எற்படுத்துவதற்கு ஒரு சிலர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட உரிய திணைக்களங்கள், அரச அதிகாரிகள் அங்கு வந்து
தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை முஸ்லிம்கள்
சூறையாடியிருக்கிறார்களா? அல்லது தொல்பொருள் புராதனச்சின்னங்களை
அழித்துள்ளார்களா என்ற உண்மையைக் கண்டறிந்து இந்த தேசத்திற்கும்,
மக்களுக்கும் உண்மையை எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
vidivill
0 comments:
Post a Comment