கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெற புதிய வியூகம்
அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம்
தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில்
இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டவுடன்
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு கட்சியின் தலைவரும் பிரதித்தலைவரும்
இணைந்து பிரசாரங்களை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டர்.
ஐக்கிய
தேசிய கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள்
அதிகமாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின்
நகர்வுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment