கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்
மற்றும் அவரது மகனான அஹமட் ஹிராஸ் ஆகிய இருவரும் நேற்று நாடாளுமன்ற கோப்
குழுவுக்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.
குறித்த
இருவரும் வெளிநாட்டில் இருப்பதாக கோப் குழுவிற்கு அறிவித்துள்ளனர்.
எனினும் உண்மையாகவே அவர்கள் வெளிநாட்டிலா இருக்கின்றார்கள் என ஆராய்ந்து
அறிக்கை தயாரிப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்நெத்தி
தெரிவித்துள்ளார்.
பெட்டிகலோ கம்பஸ் நிறுவனம் மற்றும் ஹீரா
அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ள பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை
மேற்கொள்வதற்காக குறித்த இருவரும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த
விடயங்கள் தொடர்பில் இலங்கை வங்கி அதிகாரிகள், உயர் கல்வி அமைச்சர், நிதி
அமைச்சின் பிரதிநிதிகளும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பெட்டிகலோ
கம்பஸ் தொடர்பில் பேணப்படும் வங்கி கணக்குகள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்
அழுத்தம் பிரயோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு தேவையான முறையில்
கணக்குகளை ஆரம்பிப்பதற்கு வங்கிகளுக்கு அழுத்தம் பிரயோகித்தததாக
ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment