பொத்துவில் முகுது மகா
விகாரையின் விகாராதிபதி உடமலத்தே ரத்னபிரிய தேரருக்கு எதிராக
இன்றைய தினம் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின்
தவிசாளரான எம்.எஸ். அப்துல் வாசீத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபையின் மாதாந்த
அமர்வின் போது ஏகமனதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பொத்துவில்
பிரதேச சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் கடல் மண்ணினால்
மூடப்பட்டுள்ளன. இதனால் குறித்த பிரதேசங்களின் வாழும் மக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின்
அனுமதியுடன் குறித்த மண்ணை அகழ்வதற்கான நடடிக்கையினை கடந்த ஆகஸ்ட்
27ஆம் திகதி மேற்கொண்ட போது குறித்த பிரதேசம் விகாரைக்குரியதென
பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்து இந்த
நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பினை வெளியிட்டார்.
இந்த சர்ச்சையினை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர்
முயற்சித்த போதும் அது பயனாலிக்களில்லை. இவ்வாறான நிலையில் மண் அகழ்வு
நடவடிக்கைக்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட
அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதி மற்றும்
கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு எதிராக மனுத் தாக்கல்
செய்ய பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
பிரதேச சபையினால் குறித்த பிரதேசத்தில் இதற்கு முன்னரும்
முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு குறித்த விகாரதிபதியினால் பல
தடவைகள் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போதும் நீதிமன்றத்தினை நாடியே
நாம் தீர்வு பெற்றுள்ளோம்” என்றார்.
vidivelli
0 comments:
Post a Comment