தலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர்.
நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான
துருப்புக்கள் மற்றும் பொலிஸார் வாக்குச் சாவடிகளை பாதுகாக்கவும்,
தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலும் நிலைநிறுத்தப்;பட்டுள்ளனர்.
வாக்கெடுப்பு இன்று காலை, 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதோடு, மாலை 5 மணிக்கு நிறைவுபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், தற்போதைய
ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி, அப்துல்லா
அப்துல்லாஹ்சீன் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவும் என
எதிர்வுகூறப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் பரவலான மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்
எழுந்ததை அடுத்து, அமெரிக்கா உருவாக்கிய ஐக்கிய அரசாங்கம் என
அழைக்கப்படும், தற்போதைய அரசாங்கத்தில், இருவருமே கடந்த ஐந்து வருடங்களாக
அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அமெரிக்கத் தலைமையிலான படைகள் 2001இல் வெளியேறியதை அடுத்து,
நாட்டிலிருந்து வெளிநாட்டு துருப்புக்களை திரும்பப் பெறக் கோரி தலிபான்கள்
போரை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment