ஹபரணை, ஹிருவடுன்ன பிரதேசத்தில் மூன்று காட்டு யானைகளின் சடலங்கள் இன்று (27) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்துள்ள யானைகளில் ஒரு யானை கர்ப்பமுற்ற நிலையில் காணப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் ஒரு நஞ்சுப்பொருளை உடலினுள் செலுத்தி இந்த மூன்று காட்டு
யானைகளையும் கொலை செய்திருக்கக்கூடும் என வனவிலங்கு அதிகாரிகள்
சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த காட்டு யானைகள் தொடர்பான விசாரணைகள் சீகிரியா வனவிலங்க அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment