வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை
மேற்கொள்ளும் விவசாய பண்ணைக் காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால்
குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு
கோரியுள்ளனர்.
இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக் காணியை
சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம்
ஒன்றினை மேற்கொண்டனர்.
போஹஸ்வாவே நந்திமித்திரகம றம்பாவெட்டிகுளம் பகுதியில் அப்பகுதி மக்கள்
தமது பேரணியாக விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று சிவில்
பாதுகாப்புப்படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணியை மீட்டுத்தருமாறு கோரிப்
போராட்டம் மேற்கொண்டனர்.மாமடுவ, மகாகச்சக்கொடிய, பிரப்பமடு பகுதிகளிலிருந்து சென்ற மக்கள், கமக்கார
அமைப்புக்கள், பௌத்த தேரர் தலைமையில் ஜனாதிக்கான மகஜர் ஒன்றும் அப்பகுதி
கமக்கார அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment