குருநாகல் மாவட்டத்தில் கடந்த 18 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள 29 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 230 பொலிஸார் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக வடமேல் மாகாண பிரதி பொலிஸ் அதிபர் ஜகத் அபேசிறிகுணவர்த்தன தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தி, போதைப் பொருள் வைத்திருத்தல், சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள், சட்டவிரோத போக்குவரத்து நடவடிக்கைகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்திலுள்ள 29 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 230 பொலிஸார் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக வடமேல் மாகாண பிரதி பொலிஸ் அதிபர் ஜகத் அபேசிறிகுணவர்த்தன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மற்றும் பலர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி பொலிஸ் அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment