கொழும்பின் புறநகர் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை உடைந்து
வீழ்ந்தமையினால் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷ கடும் கோபத்தில்
உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மஹரகம முன்னாள் மேயர் காந்தி கொடிகாரவை கடுமையாக கோத்தபாய திட்டியுள்ளார்.
நேற்று
காலை மஹிந்த - கோத்தபாயவின் படங்கள் அடங்கிய பாரிய பதாதை ஒன்று உடைந்து
வீழ்ந்தமையினால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், நபர் ஒருவர்
காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக
வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அத்துடன் கோத்தபாயவின் ஜனாதிபதி பிரச்சாரம்
தொடர்பில் பலரும் விமர்சித்தமையினால் அவர் கடும் கோபமடைந்துள்ளார்.
மக்களுக்கு
பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் எந்த பிரச்சார நடவடிக்கையும்
முன்னெடுக்க மாட்டேன் என உறுதியளித்துள்ளேன். இந்நிலையில் இவ்வாறான பதாதை
ஏன் காட்சிப்படுத்தப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கட்டவுட்
அடிக்க வேண்டாம் என நான் பகிரங்கமாக கூறியிருந்தேன் நினைவிருக்கின்றதா?
அப்படியிருப்பிருக்கும் இப்படியா செய்வது? சிங்கள் தெரியாதா? அந்த
கட்டவுட்டினினால் யாராவது உயிரிழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? எனது
முழுமையான பிரச்சார நடவடிக்கைகளே ஸ்தம்பிதமடைந்திருக்கும்” என கூறிய போது,
அது மஹிந்தவுக்காக அடிக்கப்பட்ட கட்டவுட் என காந்தி கொடிகார கூறியுள்ளார்.
மஹிந்தவுக்கு
அல்ல யாருக்காக கட்டவுட் அடித்தாலும் உடைந்து விழுவது என் தலையில் தான் என
கூறியவரை தொடர்ந்து அவரை தகாத வார்த்தைகளினால் திட்டியதாக குறித்த ஊடகம்
மேலும் தெரிவித்துள்ளது.
Tamilwin -
0 comments:
Post a Comment