நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரத்துக்குள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள
உதவுவாரென நம்புதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தில் எங்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள் நடப்பது
சகஜமானது என்பதுவும் பிரதமருக்கு அது நன்றாகவே தெரியுமென்றும், நான்
உணர்ச்சி வசப்பட்டு பேசுவதெல்லாம் எங்கள் மத்தியில் ஒற்றுமையையும்
ஒருமைப்பாட்டையும் தக்கவைத்து முரண்பாடுகளை களைவதற்காகவே.
நான் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் பிரதமர் எனக்கு ஆறுதல்கூறி
அமைதிப்படுத்தியிருக்கிறார். எனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு
ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர் என்றும் அமைச்சர் ஹக்கீம்
குறிப்பிட்டார்.
கண்டி வடக்கு மற்றும் பாத்ததும்பர பிரதேசத்துக்கான ஒன்றிணைந்த பாரிய
நீர்வழங்கல் திட்டத்த்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தோரகமுவையில்
சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதில் பிரதம
அதியாக கலந்துகொண்டார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர் ஆவார்.அவரொரு அரசியல் ஞானியாவார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர் ஆவார்.அவரொரு அரசியல் ஞானியாவார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் நீண்ட பயணத்தில் நாங்கள்
பல தியாகங்களை செய்துள்ளோம். அதில் குறிப்பிடத்தக்கதொன்றாக 2001 ஆம் ஆண்டு
நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இந்த பாத்ததும்பர தொகுதியில் 10 உயிர்களை
நாங்கள் இழந்திருக்கிறோம்.இவையெல்லாம் பிரதமருக்கு தெரியாத விடயங்களல்ல
என்றார்.
(நாச்சியாதீவு பர்வீன்)
0 comments:
Post a Comment