வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ள இன்னாள் மற்றும் முன்னாள்
ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க நாடு
திரும்பவுள்ளனர்.
நாடு திரும்பியதும் இருவரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி மைத்திரி, கோத்தபாய ராஜபக்சவின் மேடையிலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சஜித்தின் மேடையிலும் ஏறவுள்ளனர்.
முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள்
சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் ஏறவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறும் மேடையில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அரசியலில் பாரிய சூடு பிடிக்கும் என அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில்,
சந்திரிக்கா குமாரதுங்க தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியா சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment