சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்டு வரும் கட்சி அரசியல் நடவடிக்கையை கத்தார் வாழ் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு உறவுகளாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் இத்தேர்த்தலில் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு கத்தார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயலின் கட்சி அரசியல் சார்ந்த நடவடிக்கை கத்தார் சாய்ந்தமருது - மாளிகைக்காடு சமூகமாகிய எமக்கு கவலையளிக்கிறது.

சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும், கல்வியாளர்களும், வர்த்தக சமூகமும் அனைத்து சிவில், இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலான சாய்ந்தமருது பிரகடனத்தின் மூன்றாவது பிரகடனத்தை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.
'சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை சாய்ந்தமருது - மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.'
மேலே குறிப்பிட்ட பிரகடனத்தை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயலே மீறி 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெளசி மைதானத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் கட்சிக் கூட்டத்தில் மேடையேறி ஆதரவு தெரிவித்துள்ளமை எமக்கு கவலையளிக்கிறது.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எமது சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடுவைச் சேர்ந்த மக்கள் ஜும்மா பள்ளிவாயலுக்கு கட்டுப்பட்டு தோடம்பழ அணிக்கு வாக்களித்து 09 உறுப்பினர்களை பெற்றுத்தந்தனர். ஆனால், இன்று எமது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் சாய்ந்தமருது பிரகடனத்தை மீறி எடுத்த பிழையான முடிவினால் எமது ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்டு வரும் கட்சி அரசியல் நடவடிக்கையை கத்தார் வாழ் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு உறவுகளாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாயல் இத்தேர்த்தலில் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகிறோம்.
மேலும் எமது ஊரின் ஒற்றுமையை மீள கட்டியெழுப்ப எம்மாலான உதவிகளை செய்யவும் தயாராக இருக்கின்றோம் என்று இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
என். அஹமட் றஸ்மி
செயலாளர்
கத்தார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகம்
0 comments:
Post a Comment