எஸ்.றிபான் -
முஸ்லிம்களுக்கு
எதிராக இனவாதம் பேசி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொள்வதற்குரிய
செயற்திட்டத்தை கொண்டிருக்கின்ற தரப்பினர் தற்போது முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரானதொரு பயங்கரவாதத் தொடர்புப் பிரச்சாரத்தை
மேற்கொண்டுள்ளார்கள். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலின் போது முஸ்லிம்
தலைவர்களுக்கும், அந்த படுகொலைச் சம்பவத்திற்கும் தொடர்புண்டு என்று
மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டார்கள்.
ஆயினும், அதற்குரிய ஆதாரங்கள் இல்லாமையால் அதில் தோல்வி கண்டார்கள். எதிர்
அணியில் உள்ள முஸ்லிம் தலைவர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று
காண்பிப்பது தமது வெற்றிக்கு வழி வகுக்கும் என்று நம்பிக்கை
கொண்டுள்ளார்கள். இதனால்தான், ரவூப் ஹக்கீமுக்குக்கும், ஏப்ரல் 21 தற்கொலை
தாக்குதலுக்கு தலைமை வகித்த ஸஹ்ரானுக்கும் தொடர்புகள் என்றதொரு
பிரச்சாரத்தை ஒரு சில தனியார் ஊடகங்களின் உதவியுடன் மேற்கொண்டு
வருகின்றார்கள்.
இதுதான் சம்பவம்
கடந்த
2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அத்தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். இவரின்
இத்தோல்விக்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணம் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின்
ஆதரவாளர்களின் நிலைப்பாடாகும். இந்தப் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசிக்குரிய தேசியப்பட்டியல் மூலமாக
ஹிஸ்புல்லாஹ்வை பாராளுமன்ற உறுப்பினராக்கினார். இதனைத் தொடர்ந்து
காத்தான்குடியில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஒரு
சிலர் காயமடைந்திருந்தார்கள். அவர்களில் முஸ்லிம் காங்கிரஸின்
ஆதரவாளர்களும் இருந்தார்கள்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் காயமடைந்த தமது கட்சியின் ஆதரவாளர்களைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். அந்த வேளையில், காயமடைந்தவர்களுள் ஸஹ்ரானின் சகோதரர் ரில்வான் ஹாசிம் என்பவரும் குறிப்பிட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இதன் பொது ரவூப் ஹக்கீம் அவரையும் சுகம் விசாரித்துள்ளார்.
அந்த வேளையில் அவர்
பயங்கரவாதியாக இருந்தாரா என்பது பற்றி எந்தத் தகவலும் கிடையாது. அவர் ஒரு
சாதாரண குடிமகன் என்றே ரவூப் ஹக்கீம் உட்பட பலரினதும் பார்வையாக இருந்தது.
2019 ஏப்ரல் தாக்குதலின் பின்னர்தான் அவர் ஒரு பயங்கரவாதி என்பது
பாதுகாப்பு தரப்பினருக்கும் ஏனையவர்களுக்கும் தெரிய வந்தது.
2015இல்
நடைபெற்ற இந்த சம்பவத்தோடு தொடர்புடைய காணொளியை (வீடியோவை) வைத்துக்
கொண்டு ஸஹ்ரானுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதென்றும்,
அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் இனவாதச் சேற்றுக்குள் ஒரு சில சிங்கள
இனவாதிகள் காலை வைத்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில், தாய் நாட்டுக்கான
இராணுவம் என்ற அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன,
குறிப்பிட்ட காணொளியில் ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண சபையின்
முன்னாள் உறுப்பினர் சிப்லி பாறூக்கும் காணப்படுகின்றார்கள். இவர்களை
விசாரணை செய்து கைது செய்ய வேண்டுமென்று அவர் கோரிக்கை ஒன்றினை முன்
வைத்துள்ளார். இதே வேளை, இந்த காணொளியை தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று
ஒளிபரப்பியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். அதற்காக அவர்களுடன் கதைத்தவர்கள், பழகியவர்கள் எல்லோரும் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று கணிக்க முடியாது. அப்படியாக இருந்தால் பலரை கைது செய்ய வேண்டியேற்படும். கதைத்தவர்களும், பழகியவர்களும் பெரும்பாலும் தமது ஊரைச் சேர்ந்தவர், உறவினர், தெரிந்தவர் என்ற அடிப்படையிலேயே கதைத்தும், பழகியும் இருந்திருப்பார்கள். அதே போன்றுதான் ரவூப் ஹக்கீமும் வைத்தியசாலைக்கு சென்ற போது, முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் என்ற அடிப்படையில் ரில்வான் ஹாசிமையும் சுகம் விசாரத்துள்ளார். அதற்காக, ரவூப் ஹக்கீமுக்கும் தற்கொலை தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்புகள் உண்டென குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது ஒரு திட்டமிட்டதொரு நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.
தற்கொலை தாக்குதல்தாரிகளுடன் ஏதோவொரு அடிப்படையில் தொடர்புகளையுடையவர்களையும், எந்தவொரு தொடர்புகளையும் கொண்டிராத முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் பயங்கரவாதிகள் போன்று காட்டுவதற்கும், முஸ்;லிம்களை அத்தகையதொரு சமூகமாக சித்தரிப்பதற்கும் பௌத்த இனவாதிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டார்கள். இத்தகையதொரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பரப்புரைகள் நடைபெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன், ஹிஸ்புல்லாஹ், முஜிபுர்ரஹ்மான், அஸாத்சாலி ஆகியோர்களை ஏப்ரல் 21 சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கதைகளை கட்டினார்கள். இதன்போது இப்பத்தியில் நாம் பௌத்த இனவாதிகளின் அடுத்த இலக்கு ரவூப் ஹக்கீம் என்று குறிப்பி;டிருந்தோம். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு இராஜினாமாச் செய்தமையால், ரவூப் ஹக்கீம் மீது மேற்கொள்ள இருந்த குற்றச்சாட்டை கைவிட்டார்கள்.
ஆனால், தற்போது ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளமையால், அவர்கள் ரவூப் ஹக்கீம் மீது மேற்கொள்ள இருந்த குற்றச்சாட்டை கைவிட்டவில்லை. அதனை தள்ளிப்போட்டிருந்துள்ளார்கள் என்று தெரிகின்றது.
காட்டிக் கொடுப்பு
இதே வேளை, முஸ்;லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு வழங்கும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். ஒருவர்; பொது மேடை ஒன்றிக்கு விவாதத்திற்கு வருமாறு மற்றவரைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இன்னுமொருவர் தமது எதிர் அணி அரசியல்வாதியின் நடவடிக்கையை ஸஹ்ரானுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் என்னோடு பேசுவதற்கு தகுதியில்லை என்று இன்னுமொரு தலைவர் சொல்லியுள்ளார். முஸ்லிம் சமூகம் பௌத்த இனவாதிகள், பேரினவாதிகள் போன்ற தரப்புக்களினால் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவற்றை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது, ஆளுக்கு ஆள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பது அசிங்கமான காட்டிக் கொடுப்பாகும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது பௌத்த இனவாதிகள் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்த போது, முஸ்;லிம் சமூகம் கட்சி பேதங்களை மறந்து நோன்பு பிடித்து, துஆக்களை கேட்டுக் கொண்டார்கள். முஸ்லிம் அமைப்புக்கள் சமூக அக்கறையுடன் செயற்பட்டன. மட்டுமல்லாது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு தமது பதவிகளை இராஜினாமாச் செய்து ஏனைய சமூகத்தினர்களுக்கும், பேரினவாத அரசியல் கட்சிகளுக்கும், பௌத்த இனவாதிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள்.
அதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்ட இந்த ஒற்றுமை தொடர வேண்டுமென்று முஸ்லிம்கள் விரும்பினார்கள். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் என்று வந்ததும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களின் சுய அரசியல் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதம் எதிர்பார்த்த தாக்கத்தை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தாத இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இந்த காட்டிக் கொடுப்பு எனும் எட்டப்பர் வேலை தவிர்க்கப்பட வேண்டும். தாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, குறிப்பிட்ட அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று எடுத்துக் காட்டுதலைச் செய்ய வேண்டும். அதனைச் செய்யாது, தங்களுக்குள்ளேயே கருத்து மோதல்களில் ஈடுபடுவது சமூகத்தின் ஒற்றுமையைச் சீர்குழைக்கும் அறுவருக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.
இனவாதமும், வெறுக்கத்தக்க பேச்சும்
இதே வேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தங்களை பௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என்று சிங்கள மக்களிடையே நிருபிப்பதற்கே அதிக பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், நாட்டை பிரித்துக் கொடுக்கமாட்டோம் என்றும், நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இத்தகைய கருத்துக்கள் பௌத்த இனவாதிகளுக்கு கரும்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு, இவர்களின் இக்கருத்துக்கள் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், பௌத்த இனவாதிகள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன் வைப்பார்கள் என்பது மிகப் பெரிய ஆபத்தாகும். இத்தகைய இனவாதக் கருத்துக்கள் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை அடையும் போது வன்முறையாக மாறுவதற்கும் வழிகளை ஏற்படுத்திவிடும். அது மட்டுமன்றி தேர்தல் முடிந்தவுடன் தோல்வியடையும் வேட்பாளரின் அடியாட்கள வன்முறைகளை கையில் எடுத்து சட்டத்திற்கு சவால் விடுவதற்கும் முனைவார்கள். ஆதனால், இனவாதத்தை தூண்டக் கூடிய பேச்சுகளுக்கு எதிராக உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதித் தேர்தலை அமைதியாக நடத்தக் கூடியதாக இருப்பதுடன், தேர்தல் முடிந்ததன் பின்னரும் நாட்டில் அமைதியானதொரு சூழல் நிலவவும், தோல்வி அடைந்தவர்கள் அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளும் நிலைமையும் காணப்படும்.
தேர்தல் பிரசார மேடைகள் இனவாதத்துடன் சேர்ந்து வெறுக்கத்தக்கப் பேச்சுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்தால் வன்முறைகளை நோக்கியே தேர்தல்களம் செல்லுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆசியவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆதலால், அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இனவாத்தையும், வெறுக்கத்தக்க பேச்சுக்களையும் முன் வைக்கின்றவர்கள் அரசியல் இலாபத்தை அடைந்து கொண்டாலும், அவர்கள் அத்தகைய கருத்துக்களின் சொந்தக்காரர்கள் அல்லது அமைப்புக்களுக்கு அடிமையாகிவிடுவதனையும் காண்கின்றோம். இத்தகையதொரு நிலைமை ஏற்படும் போது, அந்த அரசியல்வாதிகள் தோல்வி அடைவதையும் காண்கின்றோம். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இந்தப் பாடத்தையே எமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. பௌத்த இனவாத கருத்துக்களினாலும், வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், ஏனைய சிறுபான்மையினரும் இனவாதத்தையும், வன்முறையையும் ஒளிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். முஸ்லிம்கள் இவருக்கு வாக்களித்து கைகளைச் சுட்டுக் கொண்டாலும், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாததொரு நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர் போட்டியிட்டால் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் வழங்கிய அமோக ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமேயாகும். தற்போது சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டை விடவும், கடுமையான மனப் பாதிப்பைக் கொண்டவர்களாக உள்ளார்கள்.
இனவாதம் வெல்லுமா?
ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும், அக்கருத்துக்களில் காணப்பட்ட ஈர்ப்பு சிங்கள மக்களிடையே குறைந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தனியே பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களின் வாக்குகளின் மூலமாக வெற்றி கொள்ளலாமென்று கணக்குப் போட்டவர்களுக்கு வலுவான மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவது பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள பௌத்த இனவாத வாக்குகளை மையப்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷவின் மேடைகளில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும், சஜித் பிரேமதாஸவின் மேடைகளிலும் அதற்கு ஈடான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதனால், பௌத்த இனவாத ஆதரவு வாக்காளர்களின் வாக்குகள் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் கணிசமான அளவு பிரிவதற்கு உள்ளன. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகளும் அவசியம் என்றதொரு நிலைப்பாட்டை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ள வேட்பாளர்கள் உணர்ந்துள்ளார்கள். இதனால், தற்போது முஸ்லிம்களை பாதுகாப்போம், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்யமாட்டோம். எல்லா மதங்களுக்கும் மதிப்பளிக்கப்படும், நீதியை நிலைநாட்டுவோம், ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்துவோம் போன்ற கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, தம்மோடுள்ள பௌத்த இனவாதிகளின் பின்னால் உள்ள வாக்குகளையும் இலக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டையும் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால்தான், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமது கட்சியினருக்கு தெரிவித்துள்ளர். ஸ்ரீலங்;கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஜனாதிபதித் தேர்தலுக்காக இணைந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையும் உள்ளது. அதனால் ஹக்கீம் மற்றும் ரிசாத்திடமுள்ள 12 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவது கட்டாயமாகும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளதாக ஊடகங்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் வீரியம் குறைந்து மௌனமாக இருப்பதனையும் பார்க்கின்றோம். இது குறித்து தேசிய மக்கள் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவிக்கையில், முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த, விரோத மனப்பான்மையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் திடீரென காணாமல் போய் விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்த அத்தரலிய ரத்ன தேரர் உள்ளி;ட்டவர்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடாது மௌனமாக இருந்து கொண்டிருப்பதனையும் அவதானிக்கின்றோம். தமது கருத்துக்கள் முஸ்லிம்களின் வாக்குகளை தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்திலேயே அத்துரலிய ரத்ன தேரர் போன்ற பௌத்த கடும்போக்கு இனவாதத் தேரர்கள் மௌனமாக இருப்பதற்கு காரணமாகும்.
இங்குதான் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் எதிராக கருத்துக்களை முன் வைத்து உண்ணாவிரதம் போன்ற நாடகங்களை அரங்கேற்றியவர்களும் கூட முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக மௌனமடைந்துள்ளமை மூலமாக முஸ்லிம்களை தங்களின் தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய மனநிலை சிங்கள அரசியல் தலைவர்களிடையேயும், பௌத்த இனவாதிகளிடையேயும் மாத்திரமல்ல, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கிடையேயும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதலால், முஸ்லிம்களை எந்தவொரு அரசியல் தலைவரும், கட்சியும் கறிவேப்பிலையாக பயன்படுத்தும் நிலை இருக்கக் கூடாது. அதற்குரிய நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Vidivelli 25.10.2019
0 comments:
Post a Comment