எஸ்.றிபான் -
பெரும்
எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதித்
தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோத்தாபாய
ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
என்றுமில்லாதவாறு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இவர்களில் பொது
பெரமுன சார்பில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கோத்தாபாய
ராஜபக்ஷவுக்கும், புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் அன்னச் சின்னத்தில்
போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே பலத்த போட்டி காணப்பட்டது.
மேலும் மக்கள் சக்தி அமைப்பின் மூலமாக திசை காட்டிச் சின்னத்தில்
போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க சுமார் 10 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்
கொள்வார் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. இதனால், இம்முறை எந்தவொரு
வேட்பாளரும் அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதத்திற்கும்
அதிகமான வாக்குகளை முதல் சுற்றில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்
எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆதலால், இரண்டாவது விருப்பு வாக்கின்
அடிப்படையில்தான் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டன.
இத்தனை எதிர் பார்ப்புக்களையும் தகத்தெறிந்த நிலையில் கோத்தாபாய ராஜபக்ஷ
52.25 வீத (6,924,255) வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை, இவரை எதிர்த்துப்
போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 41.99 வீத (5,564,239) வாக்குகளைப் பெற்று
தோல்வியடைந்துள்ளார். பத்து இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என்று
எதிர் பார்க்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க 3.16 வீத (418,553) வாக்குகளையே
பெற்றுக் கொண்டார். இதே வேளை, கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும், சஜித்
பிரேமதாஸவுக்கும் இடையிலான போட்டியில் முதல் சுற்றில் யார் வெற்றி
பெற்றாலும் சுமார் 02 முதல் 03 இலட்சம் வாக்குகளினால்தான் வெற்றி பெற
முடியுமென்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், கோத்தாபாய ராஜபக்ஷ 13
இலட்சத்து 60 ஆயிரத்து 16 (10.26 வீத) வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளார்.
கோத்தாபாய ராஜபக்ஷவின் இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது
என்று பார்க்கும் போது தேர்தலுக்காக வகுக்கப்பட்ட வியூகமும், சஜித்
பிரேமதாஸவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
உட்பட அவர் சார்பான ஒரு சில முக்கியஸ்தர்களின் உள்வெட்டும் காரணம் எனலாம்.
கோத்தாவிற்கான வியூகம்
மஹிந்தராஜபக்ஷவின்
இரண்டாவது ஆட்சிக் காலத்தின் பின்னர் அதாவது, விடுதலைப் புலிகளை
தோற்கடித்ததன் பின்னர் அதிகார அகங்காரத்தில் ஆட்சியை கொண்டு சென்றார்கள்.
சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள்
தாக்குதல்களை மேற்கொண்ட போது அதனை மஹிந்தராஜபக்ஷ கண்டு கொள்ளவில்லை. இன்றைய
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பொது பல சேனவின் காரியாலயத்தை திறக்கும்
அளவுக்கு பௌத்த கடும்போக்கு இனவாத தேரர்களுடன் நெருக்கத்தை மஹிந்த
சகோதரர்கள் வைத்துக் கொண்டார்கள். இதனால், மஹிந்தராஜபக்ஷவின் மீது
முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதே வேளை, இறுதி யுத்தத்தின் போது
தமிழர்களை வகை தொகையின்றி கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழர்கள்
மத்தியில் இருக்கின்றது. இந்நிலையில், முஸ்லிம்களும், தமிழர்களும்
தங்களுக்கு அமோக ஆதரவை தரமாட்டார்கள் என்பதனை மஹிந்ததரப்பினர் அறிந்து
வைத்திருந்தார்கள். மேலும், பௌத்த இனவாத கடும் போக்கு தேரர்களையும்,
அமைப்புக்களையும் பாலூட்டி வளர்த்தமைக்கும் ஒரு காரணம் இருந்தது. அதாவது,
சிறுபான்மையினரின் வாக்குகளின்றி சிங்கள மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற
முடியுமென்று நம்பிக்கையாகும்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஆலோசனை செய்த போதிலும், முஸ்லிமகள் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சி மீண்டும் ஏற்பட்டுவிட்டால் பௌத்த கடும்போக்கு இனவாதிகள் மேலும் பலமடைந்து விடுவார்கள் என்று கருதினார்கள். இதனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு மாற்றமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்க முஸ்லிம் சமூகம் முடிவு செய்திருந்தது. முஸ்லிம் அரசியல் தலைவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய தலைவர் ஹஸன்அலி மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று விடாப்பிடியாக நின்று முஸ்லிம் காங்கிரஸை மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்திற்கு பலவந்தமாக இழுத்துக் கொண்டு வந்தார் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
இந்தப் பின்னணியில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் அமோக ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். இதற்கு முதல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டுதான் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வியூகம் வகுக்கப்பட்டது. 2015இல் சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற முடியுமென்று நம்பியது போன்றே, இம்முறையும் நம்பினார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை மேலும் நிறைவேற்றும் வகையில் ஏப்ரல் 23இல் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் அமைந்திருந்தது. இந்த தாக்குதலை அரசியல் ஆய்வாளர்கள் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதாகவே இன்று வரைக்கும் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், நல்லாட்சி என்ற பெயரில் ஒரு குழப்பான ஆட்சியே நடைபெற்றது. இதனால், நாட்டு மக்கள் எல்லோரும் அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டார்கள்.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பு, குண்டுத் தாக்குதலினால் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றை பிரச்சாரத்திற்குரிய பேசு பொருளாக்கிக் கொண்டு, சிங்கள மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். இதே வேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய முன் ஆயத்த வேலைகளை செய்து கொள்ள முடியவில்லை. இந்த இழுபறி நடந்து கொண்டிருக்கையில் பொது ஜன பெரமுன கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்தது. அத்தோடு, சுமார் 06 ஆயிரம் விகாரைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு வலைப் பின்னலையும் உருவாக்கி இருந்தார்கள். இந்த வலைப் பின்னல் கோட்டபாய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புள்ளதென்று பௌத்த கடும்போக்கு இனவாதிகளினால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட இருக்கின்றது. சஜித் பிரேமதாஸ தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். இவை எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ்ப் பயங்கரவாதத்திலிருந்து நாடு பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைச் செய்வதற்கு கோத்தாபாய ராஜபக்ஷவே பொருத்தமானவர் என்றும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
மொத்தத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் மூலமாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பீதியும், அச்சமும் சிங்கள மக்களிடையே மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களிடமும் தாக்கம் செலுத்தியது. இதனால்தான், சஜித் பிரேமதாஸவினால் வறுமையை ஒழிப்பதற்காக முன் வைக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் புறக்கணித்து நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்று சிங்கள மக்கள் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
ஆகவே, இவ்வாறு நாட்டின் பாதுகாப்பு, சிங்கள மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளித்து, பௌத்த கடும்போக்கு அமைப்புக்களையும் இணைத்துச் செயற்பட்டார்கள். பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கினார்கள். இவற்றின் மூலமாக 2015ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்ஷ பெற்ற சிங்கள வாக்குகளை விடவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமாக ஜனாரிபதித் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு செயற்பட்டார்கள். இதனால், சிங்கள மக்களிடையே நாட்டை பாதுகாத்தல் என்ற கோஷத்தின் பின் புலத்தில் பெரும் அலையே நிலவியது. ஆகவே, கோத்தாபாய ராஜபக்ஷவின் வெற்றி என்பது சிங்கள பௌத்த வாதத்தின் உச்சக் கட்டத்தின் பெறுமானம் எனலாம்.
அடுத்தது என்ன?
ஒரு தேர்தலை வெற்றி கொள்வதற்காக வியூகங்களை வகுப்பது எல்லா அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்றுகின்றதொரு நடைமுறைதான். இதில் யார் பாதிக்கப்படுவார்கள், அடுத்து என்ன நடக்கும் என்ற கூட்டல், கழித்தல்களை கவனத்திற் கொள்வதில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதே முக்கியமாகும். இதனை அடைந்து கொள்வதற்கு எந்த தியாகத்தையும் செய்வார்கள், யாரையும் பலி கொடுப்பார்கள். ஆனால், ஒரு தரம் பயன்படுத்தப்படும் வியூகத்தை இன்னும் ஒரு தடவை பயன்படுத்த முடியாது. எதிர்த் தரப்பு அதற்கு தயாராகிவிடும்.
ஆதலால், மொட்டு அணியினர் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்திய சிங்கள மக்களின் பெரும் பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதற்காக, பௌத்த இனவாதத்தை இணைத்துச் வியூகம் அமைத்துச் செயற்பட்டதனைப் போன்று இன்னுமொரு தேர்தலில் அதனைக் கையாள முடியாது. அடுத்து வரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லா பேரினவாதக் கட்சிகளும், குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியும் இனவாதத்தை மிக மோசமாக முன் வைக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினர் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால், இனவாதத் கருத்துக்களின் பின்னால் உள்ள வாக்குகள் பிளவுபட்டு விடும். அதாவது, பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த இனவாத வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆதலால், சிறுபான்மையினரின் ஆதரவு தேவையி;ல்லை என்ற நிலைமாறி, அவர்களின் ஆதரவும் தேவையென்ற நிலைப்பாடு மீண்டும் ஏற்படவே செய்யும்.
சஜித்திற்கான வியூகம்
2015ஆம் ஆண்டு வரைக்கும் சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளையும், சிறுபான்மையினரின் வாக்குகளில் கணிசமானவற்றையும் பெற்றுக் கொண்ட வேட்பாளரே வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த வியூகத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களினால் வெற்றி முடியவில்லை. காரணம், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ரணில் விக்கரமசிங்கவின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள துணை செய்யவில்லை.
இதனால்தான், 2015ஆம் ஆண்டு கிடைக்கப் பெறும் சிங்கள மக்களின் வாக்குகளுடன் சிறுபான்மையினரின் பெரும்பாலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். நாம் மேலே கூறியுள்ளதைப் போன்று, அரசியலில் ஒரு வியூகத்தை ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்ற நடைமுறையை மறந்து மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு 2015ஆம் ஆண்டைய வியூகத்தை வகுத்துக் கொண்டார்கள். இந்த வியூகத்தை வெளிப்படையாக அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.
இவ்வாறு பழைய வியூகத்தை வகுத்துக் கொண்டாலும், 2015ஆம் ஆண்டு பெற்ற சிங்கள மக்களின் வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ரணில் வி;க்கிரமசிங்கவின் தொகுதி கூட தோல்வியடையும் வகையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அதே வேளை, 2015ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் அதிக வாக்குகளை சிங்கள மக்கள் மொட்டுச் சின்னத்திற்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை ஈடு செய்வதற்கு சிறுபான்மையினர் தமது வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டுமென்று சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்குரிய முயற்சிகளையும் எடுத்துக் கொண்டார்கள். வடக்கு, கிழக்கில் சிறுபான்மையின மக்கள் சுமார் 80 வீத வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கினார்கள்.
கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக விகாரைகளும், அதிலுள்ள தேரர்களும், பௌத்த இனவாத அமைப்புக்களும் முயற்சிகளை எடுத்துக் கொண்டதற்குரிய மாற்று நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியினர் எடுக்கவில்லை. அதற்குரிய கால அவகாசமும் இருக்கவில்லை.
இதே வேளை, சிங்கள மக்களிடையே ஏப்ரல் 21 தாக்குதலை முன்னிலைப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியது போன்று, தமிழ், முஸ்லிம் மக்களிடையே தமிழ், முஸ்லிம்களின் பாதுகாப்பு, ஜனநாயகம், அரசியல் தீர்வு விவகாரங்களை முன்னிலைப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிய தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மேற்கொண்டார்கள். ஆதலால், இந்தத் தேர்தலில் சிங்கள மக்களிடையேயும், சிறுபான்மை மக்களிடையேயும் இனவாதக் கருத்துக்களை ஓங்கச் செய்து, அச்சத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் வேறுபட்ட இனவாத அலை வீசியதென்றே சொல்ல வேண்டும். இந்த இனவாத அலையில் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு வகுக்கப்பட்ட வியூகம் சிங்கள மக்களிடையே மிகப் பெரிய இனவாத அலையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதே
வேளை, ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பாராளுமன்ற
உறுப்பினர்களில் பலர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு தம்மை ஈடுபடுத்திக்
கொள்ளவில்லை. அவர்கள் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதிலும் பார்க்க தோல்வி
அடைவிதலேயே சந்தோசம் கொண்டாடும் மனநிலைக் கொண்டிருந்தார்கள். தனது
தோல்விக்கு கட்சியின் தலைமையே பிரதான காரணமென்று சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,
சஜித் பிரேமதாஸவிடம் தேர்தலுக்கு செலவு செய்வதற்கு போதிய பணம்
இருக்கவில்லை. கோத்தாபாய ராஜபக்ஷவின் சார்பில் அதிக செலவீடுகள்
மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சஜித் பிரேமதாஸ தேர்தல் செலவுகளை ஈடுசெய்வதில்
அதிக கஸ்டங்களை எதிர் கொண்டார். சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள
கருத்துக்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதாவது, தேர்தல் பிரச்சாரக்
காலத்தில் நான் சகலரையும் நம்பினேன். எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம்
செய்தது. எனக்கு உரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற்போது
கடனாளியாகியுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை
எதிர்கொண்டேன். எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர்
பாம்புகளை போல செயற்பட்டனர். இந்த இரு தரப்பினரும் எனது தோல்விக்கு
வழிவகுத்தனர். எங்கள் அணியில் இருந்த சிலர், அமெரிக்காவுடன் மிலேனியம்
ஒப்பந்தத்தை செய்ய ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் பௌத்தத்திற்கு எதிராக குரல்
கொடுத்தனர். என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே
இந்தப் பயணத்தில் இறங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கென ஒரு
வீட்டைக் கூட கட்டிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய
வேண்டுமென, கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும் பலர் நான் வெற்றியடை
வேண்டுமென ஆசைப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அவரின் நிலையை
புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
ரணில்
விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் நானே
பிரதம மந்திரி என்று திடீர் அறிவிப்பு ஒன்றைச் செய்து சிங்கள மக்களிடையே
சலசலப்பை ஏற்படுத்தினார். மேலும், ரணில் விக்கிரமசிங்க, தேர்தலின் இறுதி
வாரத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தை
மேற்கொண்டமையும் சஜித் பிரேமதாஸவுக்கு சிங்கள மக்களிடையே செல்வாக்கை
குறைவடையச் செய்தது. ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
தீர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தமை, சிங்கள மக்களிடையே ரணிலும்,
சஜித்தும் நாட்டை பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்று கோத்தாபாய
ராஜபக்ஷ அணியினர் பிரச்சாரம் செய்வதற்கு துணை செய்தது.
இதே
வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு திரைமறைவில் ஆதரவை
வழங்கிக் கொண்டிருந்த நிலையில், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம்
வெளியிடப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில்
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளதால், அவருக்கே நாங்கள்
நிபந்தனையற்ற ஆதரவு என்று பகிரங்கமாக அறிவித்தது கூட சஜித் பிரேமதாஸவுக்கு
இருந்த சிங்களவர்களின் ஆதரவில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. சஜித்
பிரேமதாஸவின் வெற்றிக்கு ஒரு சிலரே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
ஏனையவர்கள் அசமந்தமாக செயற்பட்டார்கள் எனலாம்.
பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி
புதிய
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ புனித ருவான்வெலிசாய மண்டபத்தில் ஜனாதிபதியாக
சத்திய பிரமாணம் செய்து உரையாற்றும் போது, சிங்கள மக்களின் ஆதரவுடன்
மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான்
அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேட
கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு.
ஆனால் அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளில் அரை வாசிக்கும் குறையாத வாக்குகள் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டுள்ளமையை துள்ளியமாக கணிக்கும் போது
அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சிறுபான்மை மக்களின் வாக்குகள்
இவ்வாறு அளிக்கப்படாது இருந்தால் கோத்தாபாய ராஜபக்ஷவின் வெற்றியும்
கேள்விக்குள்ளாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினர்
செறிந்துள்ள தொகுதிகளில் சஜித் பிரேமதாஸவுக்கு அதிக வாக்குகளும்,
பெரும்பான்மையினர் செறிந்துள்ள தொகுதிகளில் வாழும் சிறுபான்மையினர்
பெரும்பான்மையினருடன் இணைந்து கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்துள்ளார்கள்
என்பது உண்மையாகும். முஸ்லிம்களை பொறுத்த வரை வடக்கு, கிழக்கு
மாகாணங்களுக்கு வெளியே மூன்றில் இரண்டு பகுதியினர் வாழ்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
நன்றி - விடிவெள்ளி 22.11.2019

0 comments:
Post a Comment