• Latest News

    November 24, 2019

    மங்கள சமவீர அரசியலுக்கு ஓய்வு. சஜித் தேசிய தலைவரானார்

    முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் இருந்து விலகி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அரசியலில் இருந்து விலகி தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

    மங்கள சமரவீர லத்தீன் அமெரிக்க நாடொன்றில் குடியேற தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மங்கள சமரவீர இனிவரும் காலங்களில் கட்சி அரசியலில் இருந்து விலகி இலங்கையில் உள்ள சகல இன மக்களின் நல்லிணக்கத்திற்காக புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

    கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார பணிகளில் முக்கிய பங்கு வகித்த மங்கள சமரவீர மற்றும் மலிக் சமவிக்ரம ஆகியோர் தேர்தல் தோல்வியின் பின் தாம் வகித்த பதவிகளில் இருந்து விலகினர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் இவர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

    தேர்தல் தோல்விக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களின் பட்டியலில் மங்கள சமரவீரவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த மங்கள சமரவீர, உண்மையில் சஜித் மற்றவர்களின் பாவத்தை சுமக்க நேரிட்டது. சஜித் போட்டியிடவில்லை என்றால் இதனைவிட படுதோல்வி ஏற்பட்டிருக்கும்.

    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் சஜித் பிரேமதாச தேசிய தலைவர் என்பது உறுதியாகியுள்ளது. இது நாங்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றி. தற்போது எமக்கு எதிர்பார்பொன்று உள்ளது எனக் கூறியிருந்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மங்கள சமவீர அரசியலுக்கு ஓய்வு. சஜித் தேசிய தலைவரானார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top