தலைமைப்பதவியை தன்னிடம் ஒப்படைக்கா விட்டால் செயற்பாட்டு அரசியலில்
இருந்து ஒதுங்கி விடப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
பலரும் கூறுவதைப் போல, தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தனக்கில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததன் பின்னர், ஐ.தே.க
கதிகலங்கிப் போயுள்ளது. சஜித்தை வேட்பாளராக்கி விட்டு, தோற்கடிக்கும்
வேலையை கட்சித் தலைமையே செய்தது என்பதை, தாமதமாகவே சஜித் தரப்பு புரிந்து
கொண்டுள்ளது. இதனால் ரணிலின் தலைமைத்துவதற்திற்கு எதிராக கடுமையாக
அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், கட்சி பிரமுகர்கள் மற்றும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்கும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்கும் ரணில் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், இந்த சந்திப்புக்களில் சஜித் கலந்துகொள்ளவில்லை. அவரை கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல, கட்சியின் மூத்த பிரமுகர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே, தனது உறுதியான நிலைப்பாட்டை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும், ரணில் பதவி விலக வேண்டுமென, சஜித் தரப்பு எம்.பிக்கள் விடாப்பிடியாக நின்றனர்.
இந்த சர்ச்சைகளையடுத்து, சஜித்துடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு ரணில் முயன்றதாகவும், எனினும், ரணிலின் அழைப்பை சஜித் ஏற்கவில்லையென்றும் தெரிகிறது.
எனினும், கடந்த தடவைகளை போல, கட்சித் தலைமைக்கு கடுமையாக மல்லுக்கட்டுவதில்லையென்றும், கட்சித் தலைமை ஒப்படைக்கப்படா விட்டால் வீடு சென்றுவிடுவேன் என்றும் சஜித் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment