• Latest News

    March 31, 2020

    இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்கள் : சுகாதார அமைச்சு

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இரண்டு நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

    அதன்படி, இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

    இதேவேளை, நாட்டில் இதுவரை 122 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

    மேலும், 104 கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    அதேபோல், நாட்டின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்கள் : சுகாதார அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top