• Latest News

    March 19, 2020

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 56ஆக அதிகரித்துள்ளது

    கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. 
    இதன் போது கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் இன்று (19) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார். 
    மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    இவர்களுள் இருவர் முன்னாதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள மாணிக்ககல் வியாபாரியின் மனைவி மற்றும் மகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 56ஆக அதிகரித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top