திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மு.காவும், அ.இ.ம.காவும் இணைந்து தேர்தல்
கேட்க வேண்டுமென்ற கதையாடல்களை அவதானிக்க முடிந்தது. இருவரும் ஒற்றுமையாக
செயற்படுங்கள் எனக் கூறுவதை யாரும் குற்றம் பிடித்திட இயலாது என்பதை
மறுப்பதற்கில்லை. இக்கூட்டு பேச்சு குழம்பியதும், மு.காவினர் தங்களது
வழமையான அரசியல் பாணியில் அ.இ.ம.கா ஏதோ பாரிய பிழை செய்துவிட்டததைப் போன்று
காட்ட முற்படுவதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் கூட்டை குழப்பியடித்தது
மு.காவே!
இக்கூட்டு பயனற்றது என்பதை உறுதியாக விளக்க முடியும். தற்போது மு.காவானது
சஜித் கூட்டணியோடு இணைந்து இரு ஆசனங்களையும், அ.இ.ம.கா தனித்து ஒரு
ஆசனத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது. மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைக்கும். இரு
அணியினரும் இணைந்து மாவட்டத்தை வெற்றிகொண்டாலும் ஆகக் கூடியது மூன்று
ஆசனங்களையே பெற முடியும். சில வேளை சஜித் - மு.கா கூட்டு வாக்கு குறைவால்
ஒரு ஆசனத்தை பெறவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு அக்கூட்டு வாக்கின் நிலை
இருந்தால், அ.இ.ம.கா இக்கூட்டோடு இணைந்தாலும் மாவட்டத்தை வெற்றிகொள்ள
முடியாது. போனஸ் கிடைக்காது. இரு ஆசனங்களே உறுதி செய்யப்படும். இதனை
கூட்டின்றி சாதாரணமாகவே உறுதி செய்ய முடியும். அ.இ.ம.காவின் ஆசனமும் உறுதி
செய்யப்படும். ஆசன அதிகரிப்பில்லையென்றால் கூட்டு எதற்கு?
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூட்டு அவசியமில்லை என்ற நிலைப்பாடு இருந்தாலும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அ.இ.ம.கா கூட்டிணைவை மறுக்காது இறுதிவரை பரிசீலனை செய்திருந்தது. மு.காவோடு பேச்சுக்களிலும் ஈடுபட்டது. கடந்த செவ்வாய் கிழமை இரவு வரை பேச்சுக்கள் நடைபெற்றுமிருந்தன. கூட்டிணையும் எண்ணமில்லையென்றால், அ.இ.ம.கா பேச்சுக்கு சென்றிருக்காதல்லவா?
இந்த பேச்சுக்களின் போது மு.காவினர் தங்களது கட்சியில் ஐவரையும், அ.இ.ம.காவைச் சேர்ந்த ஒருவரையும் சஜித் அணியுடன் களமிறக்குமாறு கோரினர். இது எவ்வகையிலும் ஏற்கக்கூடிய கோரிக்கையல்ல என்பதை யாவரும் ஏற்பர். இதனை ஏற்காத அ.இ.ம.கா மொத்தமாக மூன்று நபர்களை மாத்திரம் களமிறக்குமாறும், அதில் இரண்டு மு.காவுக்கு, ஒன்றை தனக்கும் கோரியது. இது சரி தானே? இதனை மு.காவினர் ஏற்கவில்லை. இதன் காரணமாக கூட்டிணைவு சாத்தியமற்றுப் போனது. இதனை நடுநிலை கோணத்தில் பார்க்கின்ற ஒருவரால், மு.காவே கூட்டை குழப்பியடித்துள்ளது என்பதை ஏற்க முடியும்.
5:1 என்ற வேட்பாளர் பகிர்வின் மூலம் அ.இ.ம.கா முக்கியஸ்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அ.இ.ம.காவின் திகாமடுல்ல ஆசனத்தை இல்லாமல் செய்து, மு.காவானது அ.இ.ம.காவின் வாக்கில் , தனது மூன்று ஆசனத்தை உறுதி செய்து, அ.இ.ம.காவை அம்பாறையில் இருந்து துடைத்தெறிவதே அங்கு பாவிக்கப்பட்ட மு.காவின் உபாயம். அது தவிர்ந்து சமூக நோக்கம் ஏதுமில்லை. இப்போது கூட்டிணைவு சாத்தியமற்று போனதன் பிழையை அ.இ.ம.காவின் தலையில் போட்டு, அவர்களை துரோகியாக்கி, இழி அரசியல் செய்ய முனைகின்றனர். யார் துரோகி?முஸ்லிம் சமூகமே!
உண்மையான துரோகியை இனங்கண்டு கொள். எம் மீது போடப்பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிவோம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

0 comments:
Post a Comment