இந்நிகழ்வில் மாணவர்கள் எதிர் காலத்தில் முகங் கொடுக்கக் கூடிய சவால்கள் தொடர்பில் கருத்துக்ககள் முன் வைக்கப்பட்டன.
அத்தோடு அன்றைய தினம் பல்கலைக்கழக அனுமதிக்கான இலத்திரனியல் விண்ணப்ப பதிவுகளும் (கடந்த 2020.03.14 சனிக்கிழமை மற்றும் 2020.03.15 ஞாயிறுக்கிழமை) நடைபெற்றது.
நிந்தவூர் கமுஃஅல் -அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் MFM.அல்தாப் இலாஹி மற்றும் செயலாளர் AC.பவாஸ் முஹம்மட் ஆகியவர்களின் வழி;காட்டல்களின் கீழ் வெற்றிகரமாக இடம்
பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 150இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து
கொண்டார்கள்.
மேலும் இவ் நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளர்களாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் FHA.சிப்லி மற்றும் உளவளத்துறை ஆசிரிய ஆலோசகர் அஷ்ரக் இஸ்மாயில் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

0 comments:
Post a Comment