• Latest News

    March 16, 2020

    புத்தக வெளியீட்டு விழாவில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரபீக் கௌரவிக்கப்பட்டார்

    நிந்தவூர் மக்கீன் ஹாஜி அவர்களின் மூன்று வருடங்களுக்கு வெளியீட்டு விழா 16/03/2020 ஞாயிறு அன்று நிந்தவூர் அல் - மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்றது. 
     நிந்தவூர் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் உயர் பீட உறுப்பினரும், கென்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.எம். றபீக் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிககப்பட்டார்.
     
     
    உயர் பதவியில் இருந்தாலும் அனைவரோடும் அன்போடும் நட்போடும் பழகக்கூடிய இவர் கடந்த காலங்களில் எமது பிராந்தியத்தில் சமூகம் சேவை மற்றும் விளையாட்டு துறைக்கு குறிப்பிடத்தக்களவு பங்காற்றியவர் என்பதும். கடந்த காலங்களில் பல்வேறு விளையாட்டு கழகங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து இளைஞர்களை கொண்டு பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டவர் என்பதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அவர்களுடன் இணைந்து சமூக முன்னேற்றத்திற்கு பல ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்விழாவின் பிரதம அதிதியாக சிரேஷ்ர சட்டத்தரணியும், நாடறிந்த எழுத்தாளரும், கவிஞருமான அல்ஹாஜ்.S.முத்துமீரான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் . நிந்தவூர் கலைஇலக்கியப் பேரவையின் தலைவரும், ஓய்வுநிலை வைத்தியரும், கவிஞரும், எழுத்தாளருமான அல்ஹாஜ் A.M.ஜாபிர் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாய் நடைபெற்றது.

    AH. சபீர் முஹம்மத்
    செயலாளர்
    அனைத்து விளையாட்டு சம்மேளனம்
    நிந்தவூர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தக வெளியீட்டு விழாவில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரபீக் கௌரவிக்கப்பட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top