• Latest News

    March 10, 2020

    சம்மாந்துறை NC மத்திய குழு அதாஉல்லாவுடன் அதிர்ப்தி!

    க்கியஸ்தர்களை சந்திப்பதற்கு முன்னதாக ACMCயின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் V.C இஸ்மாயில் அவர்களின் வீட்டுக்கு சென்றதும் VCயை கட்சியில் இணைத்துக் கொண்ட விடயமும் தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை பிரமுகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    சம்மாந்துறைக்கு சென்ற அதாஉல்லாஹ் தனது கட்சியின் மு
    இது தொடர்பாக அதாஉல்லாவை சந்தித்து பேசிய கட்சியின் சம்மாந்துறை பிரமுகர்கள் வீ.சியை இணைத்துக் கொண்டமை தொடர்பில் தங்களுடைய அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு பதில் அளித்த அதஉல்லாஹ், நீங்கள் யாரும் இங்கு கட்சியை வளர்க்கவில்லை என்றும் உங்களால் பத்தாயிரம் வாக்குகள் கூட எனக்கு பெற்றுத்தர முடியாது என்றும் மத்திய குழுவினரை சாடியுள்ளார்.
    ஆனால் உண்மையில் அதாஉல்லாஹ் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் காலத்தில் வேட்பு மனு செய்வதில் காட்டிய தாமதமும் இங்கு நினைவுகூற வேண்டிய ஒன்றாகும்.
    ஆனாலும் அதாஉல்லாஹ் எதிர்பார்க்கு பத்தாயிரம் வாக்குகள் வீ.சி இஸ்மாயிலுக்கு இல்லை என்பது அதாஉல்லாவைத்தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
    இது இவ்வாறு இருக்க வீ.சியின் வீட்டில் இருந்து வெளியான அதாஉல்லாஹ் டொக்டர் அன்வர் எம் முஸ்தபாவின் வீட்டுக்கு சென்று அங்கு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் வீ.சியின் வீட்டுக்கு இன்னுமொரு முக்கிய நபர் வந்துள்ளார். அவர் யார் என்றால் முன்னாள் மாகாண சபை அமைச்சர் தே.கா முன்னாள் அமைப்பாளர் எம்.எஸ் உதுமாலெப்பை அவர்கள்தான் வந்து சென்றுள்ளார்.
    அதாஉல்லாவுடன் இவ்வளவு காலமும் இருந்து சம்மாந்துறையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தே.கா கட்சிக்காக உழைத்த மத்திய குழுவை அதாஉல்லாஹ் வீ.சி இஸ்மாயிலை கட்சிக்குள் உள்வாங்குவதற்காக புறக்கணித்துள்ளதாகவும் கடந்த காலங்களில் தே.கா வளர்க்க எமக்கு சவால் விட்டவர்களை தற்போது கட்சியில் இணைத்து அவர்களுடன் வேலை செய்ய அதாஉல்லாஹ் எதிர்பார்ப்பது கவலையளிப்பதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அங்குள்ள முக்கியமான சிலர் வருத்தம் தெரிவித்தார்கள். மட்டுமல்ல நாங்கள் தொடர்ந்து அதாஉல்லாவுடன் பயணிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அலோசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
    சம்மாந்துறையில் எத்தனையோ படித்த நல்ல தலைமைத்துவ பண்புள்ளவர்கள் கட்சியில் இருந்தும் அவர்கள் அனைவரையும் புறக்கணித்து அதாஉல்லாஹ் இவ்வாறு நடந்துகொள்வது அவருடைய வெற்றியை மேலும் சந்தேகத்துக்குள்ளாக்கிறது.
    Ahamed Furhan JP
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை NC மத்திய குழு அதாஉல்லாவுடன் அதிர்ப்தி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top