• Latest News

    March 23, 2020

    முஸ்லிம்களுக்கு எதிராக நான் தெரிவித்ததாக பரவும் இனவாத கருத்தில் எவ்வித உண்மையுமில்லை - சஜித்

    (எம்.ஆர்.எம்.வஸீம்)
    நான் தெரிவித்ததாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்தில் எந்த உண்மையும் இல்லை. எனது உடம்பில் இனவாத இரத்தம் ஓடவில்லை என  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம்கள் ஊரடங்குச்  சட்டத்தை மதிப்பதில்லை. அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற இனவாத பொருள்பட  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் அவரின் மறுப்பு செய்தியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
     நான் ஒருபோதும் இனனவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. நான் இனவாதியுமல்ல. குறுகிய நோக்குடன் சிலர் இனவாதப் பிரசாரத்தை இவ்வாறு பரவச் செய்கின்றனர். எந்த வேளையிலும்  முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான ஒரு கருத்தை  தெரிவிக்கவில்லை. நான் அப்படிப்பட்டவன் அல்ல. எனது உடம்பில் ஓடுவது பிரேமதாசாவின் இரத்தம் இந்த உடம்பில் இனவாத இரத்தம் ஓடாது.

    அத்துடன் எனது கட்சியில் றிஷாத் பதியுதீனை இணைக்க வேண்டாமென வலியுறுத்தினர். ஆனால் அவர் எனது கட்சியில் போட்டியிடுகிறார். அதேபோன்று  அஸாத் சாலிக்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டாமென்றனர். அவருக்கு எமது கட்சியில் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

    மேலும் சகல மாவட்டங்களிலும் எமது கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படியிருக்க நான் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பேன். எனவே இதுபோன்ற தவறான தகவல்களை முஸ்லிம்கள் நம்ப வேண்டாமென்று நான் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்கிறேன். குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்
    Virakesari

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கு எதிராக நான் தெரிவித்ததாக பரவும் இனவாத கருத்தில் எவ்வித உண்மையுமில்லை - சஜித் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top