• Latest News

    March 26, 2020

    மாணவர்கள் வீடுகளில் கற்றல் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் : நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்

    எஸ்.என்.மீரா –
    மாணவர்கள் தங்களின் வீடுகளில் உள்ள இருக்கின்ற இன்றைய சூழலில் தாம் ஏற்கனவே பாடசாலைகளிலும், பிரத்தியோக வகுப்புக்களிலும் கற்ற பாடங்களை மீட்டுக் கொள்வதுடன், தங்களது வீடுகளில் பட்டதாரி, உயர்தரம், சாதாரண தரம் கற்ற சகோதரர்கள் இருந்தால் அவர்களின் துணையோடு புதிய பாடங்களையும் கற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் (அஸ்ரப்) தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

    கொரனா வைரஸ் தாக்கத்தினை முன்னிட்டு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்று நிச்சயித்துக் கொள்ளவும் முடியாதுள்ளது. ஆதலால், மாணவர்கள் தங்களின் வீடுகளில் உள்ள இருக்கின்ற இன்றைய சூழலில் தாம் ஏற்கனவே பாடசாலைகளிலும், பிரத்தியோக வகுப்புக்களிலும் கற்ற பாடங்களை மீட்டுக் கொள்வதுடன், தங்களது வீடுகளில் பட்டதாரி, உயர்தரம், சாதாரண தரம் கற்ற சகோதரர்கள் இருந்தால் அவர்களின் துணையோடு புதிய பாடங்களையும் கற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

    மேலும், மாணவர்கள் தாங்கள் பாடங்களை வீட்டில் கற்றுக் கொள்ளும் போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளவும் முடியும். மாணவர்களின் சுயகற்றலுக்கு உதவுவதற்கு ஆசிரியர்கள் ஒரு போதும் பின் நிற்கமாட்டார்கள்.

    மாணவர்கள் தமது வாழ்வில் என்னதான் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கல்வியில் உள்ள தமது கவனத்தை திசை மாற்றிவிடக் கூடாது. ஒரு மனிதனை கல்விதான் முழுமையாக வாழ வைக்கும். ஆதலால், மாணவர்கள் தமது பாடங்களில் அதிக அக்கறை காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதே வேளை, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் வீட்டில் உள்ள இந்நாட்களில் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் கரிசனை காட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    இதே வேளை, மாணவர்கள் எக்காரணம் கொண்டும் ஊரடங்கு சட்ட வேளைகளில் வெளியே செல்லாதீர்கள். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது அவசர தேவைகளுக்கு செல்வதாக இருந்தால் பெற்றோர்கள் வெளியே செல்வதே சிறந்ததாகும். இராணுவமும்,  பொலிஸாரும் எங்களின் நன்மைக்காகவே கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். நாட்டில் கொரனா மேலும் பரவி பேராபத்தாக அமைந்து விடக் கூடாதென்பதில் பாதுகாப்பு தரப்பினர் கவனமாக இருக்கின்றார்கள். அதனால், நாம் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கடமையாகும்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவர்கள் வீடுகளில் கற்றல் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் : நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top