• Latest News

    March 27, 2020

    பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையின் முக்கிய அறிவித்தல். அதிக விலைக்கு மரக்கறி வகைகளை விற்பனை செய்தால் கைது செய்யப்படுவார்கள்

    நாட்டில் உடன் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் பிரகாரம், மரக்கறி மொத்த விற்பனை நிலையத்துக்கு வௌியே விற்பனைசெய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோவுக்கு 40 ரூபா மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதனடிப்படையில்,

    * கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபா
    * லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா
    * போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா
    * கோவா 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபா
    * பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபா
    * கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபா
    * தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபா
    * வெண்டிக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா
    * வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா
    * கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபா
    * தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபா
    * காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபா

    என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில், புறக்கோட்டை மெனிங் சந்தையில் மரக்கறிகளை அதிக விலையில் விற்பனைசெய்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைதெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையின் முக்கிய அறிவித்தல். அதிக விலைக்கு மரக்கறி வகைகளை விற்பனை செய்தால் கைது செய்யப்படுவார்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top