சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை ஏற்பாட்டில் "தேசிய அரசியலில்
அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம்"
2020.03.08இல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற போதே
பின்வரும் விடயங்கள் அடங்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீட் பிரகடனத்தை வாசித்து வெளியிட்டு வைத்தார்.
தேசிய பாதுகாப்பு, சமூக நலன் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான சாய்ந்தமருது ஐந்து அம்சப் பிரகடனம்.
மருதூருக்கு மகுடம் தந்த ஆளுமையுடன், மாவட்டத்தின் விடியலை நோக்கிய பயணம்
இது. இந்தப் பயணம் எமது சமூகத்திற்கான விடிவாக மட்டுமல்லாது, இலங்கையின்
அரசியல் கலாசாரத்தில் புதியதொரு புரட்சியை மேற்கொள்ளும் முயற்சியுமாகும்.
இப்பயணத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்க பின்வரும் விடயங்கள் தொடர்பாக நாம் எல்லோரும் உறுதி பூணுவோம்.
1.அவர்கள் கொடுத்த வஹ்தாவை நிறைவேற்றியதற்குக் கைமாறாக,
நாம் வழங்கிய வஹ்தாவைவை நிறைவேற்றி கைமாறு செய்வோம்.
2. இனத்துவ ரீதியான அரசியலில் இருந்து விடுபட்டு, தேசிய அரசியலை
முன்னிறுத்தியதான புதிய அரசியல் அணுகுமுறையை இங்கிருந்து மாற்றியமைப்போம்.
3.கடந்தகால சுயநல அரசியலால் எமது சமூகத்திற்கு ஏனைய சமூகத்தினர் மத்தியில்
ஏற்பட்டிருக்கின்ற பிழையான அபிப்பிராயங்களை நீக்கி அவர்கள் மத்தியில் எமது
சமூகம் தொடர்பாகக் காணப்படுகின்ற அச்சநிலையை இல்லாமாலாக்க எல்லோரும்
ஒன்றிணைந்து செயற்பட இன்றிலிருந்து உறுதி பூணூவோம்.
4.ஜானதிபதி, பிரதமரின் போன்றோரின், தேசியப் பதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஒன்றிணைவோம்.
5.பிரதேசத்திற்கான குறுகிய தலைமைத்துவம் என்கின்ற சுயநல அரசியலை
இல்லாதொழித்து, மாவட்டத்திற்கு பேதம் பாராது அபிவிருத்தியை செய்யக்கடிய
தலமைத்துவத்தை இந்த மண்ணிலிருந்து உருவாக்க உறுதிபூணுவோம்.
எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து எமது அரசியல்
பயணத்தில் கடந்த காலங்காளில் பிரிந்திருந்த எல்லோரையும் பேதங்களை மறந்து
கைகோர்குமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம்.
மாறாக, தேசிய பாதுகாப்பையும், தேசிய நலனையும் அடிப்படையாகக் கொண்ட
இப்பயணத்திற்கு எதிராக செயற்பட வேண்டாமென மிகப் பணிவன்புடன் வேண்டிக்
கொள்கின்றோம்.
இவ்வண்ணம்.
- மக்கள் பணிமனை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு
0 comments:
Post a Comment