அனுராதபுரம் சிறையில் இடம்பெற்ற வன்முறையின் போது காயமடைந்த மற்றும் ஒரு கைதியும் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
ஏற்கனவே இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு
செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.
அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த வன்முறை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment