• Latest News

    March 27, 2020

    நிந்தவூர் ஹம்ஸா ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள்

    நிந்தவூர் ஹம்ஸா ஹோட்டல் நிர்வாகத்தினர் இன்று காலை 7.30 மணி முதலட பகல் 12 மணி வரை நிந்தவூரிலுள்ள தமது வாடிக்கையாளர்களின்  நலனைக் கருத்திற் கொண்டு இறைச்சி ரொட்டி, வராட்டா ரொட்டி ஆகியவற்றை விநியோகம் செய்தார்கள். தொலை பேசி மூலமாக கிடைக்கும் ஓடர்களை ஏற்று வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று இந்த உணவுகளை வழங்கினார்கள்.  இவ்வாறு உணவுப் பொருட்களை வழங்குவதற்குரிய அனுமதியை பாதுகாப்பு தரப்பினரிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    இவ்வாறு பொருட்களை வழங்கிய போதிலும் இன்று எல்லா ஓடர்களையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டதாக ஹம்ஸா ஹோட்டல் உரிமையாளர் முஹம்மட் லரிப் கவலையுடன் எமக்கு தெரிவித்தார். உணவுப் பொருட்களை தயாரிப்பதற்குரிய பொருட்கள் போதிய அளவு கிடைக்காமல் போனதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
    ஆயினும், இன்ஷா அல்லாஹ் நாளை முதல் கிடைக்கும் ஓடர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். தற்போது  உணவுப் பொருட்களை தயாரிப்பதற்குரிய அனைத்துப் பொருட்களும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆதலால் வாடிக்கையாளர்கள் 0774794018 அல்லது  0758902850 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஓடர்களை நாளை காலை பதிவு செய்து கொள்ள முடியும்.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் ஹம்ஸா ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top