கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நாட்டில் கட்டுப்படுத்தப்படும் வரை
அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்குள் வருவதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மட்டத்தில் இதற்கான தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயணிகள் விமானங்களின் வருகை இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த
நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம்
முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை இந்த தடை
அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்சார
இணைப்புக்கள் துண்டிக்கப்படும் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றவர்கள் மின்சாரக்
கட்டணங்களை செலுத்துவற்கு மார்ச் 31ஆம் திகதி வரை காலநீடிப்பு
செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இதற்கிடையில்
இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 146 அடியார்கள் நேரடியாக
தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment