கல்முனை பொலிஸார் ,விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர்
மற்றும் மாநகர சபை ஒன்றிணைந்து கல்முனை நகரை சுத்தப்படுத்தும் பணியை இன்று
(28.03.2020) ஆரம்பித்தனர்.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஜனாதிபதி
செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய கொவிட் 19 எனும்
கொரோணா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் நோக்கில் கல்முனை பொலிஸார்,விசேட
அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன
ஒன்றிணைந்து நகரை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (28.03.2020)
கல்முனை மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதில்
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர, கல்முனை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி
ஏ.எல்.ஏ.வாஹிட், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி
எம்.எச்.ஏ.மதுரங்க, கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், பிராந்திய
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள்
உட்பட மாநகர சபை அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


0 comments:
Post a Comment