ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் உள்ள 23
பள்ளிவாசல்களின் பிரதான கதவுகளை மூடுமாறு ஹொரவ்பொத்தான மன்பாவுல் ஹஸனாத்
ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயினை
கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த
நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வழங்கிய ஆலோசனைக்கு மாற்றமாக
கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாயலில் தொழுகை நடாத்தியமை தொடர்பில் நிர்வாக சபையை
வக்பு சபையிலிருந்து விலக்கியுள்ளதாகவும் பெரிய பள்ளி வாயலின் தலைவர் ஏ.
எம். சியாம் ஹாஜியார் தெரிவித்தனர்.
அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை அனைத்து பள்ளிவாசல்களையும்
மூடுமாறும், வேறு இடங்களில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்
எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment