எஸ்.என்.மீரா –
இன்று அரசாங்கம் அம்பாரை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை காலை 06 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தளர்த்தி இருந்தது.
இன்று அரசாங்கம் அம்பாரை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை காலை 06 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தளர்த்தி இருந்தது.
கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொது
மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை
அமுல்படுத்தியது. ஆயினும், பொது மக்களின் உணவுத் தேவை, நோயாளர்களுக்குரிய
மருந்துத் தேவையையும், ஏனைய தேவைகளையும் கருத்திற் கொண்டு ஊரடங்குச்
சட்டத்தை தளர்த்தியமைக்கான பிரதான காரணமாகும்.
இந்த வேளையில் பொது மக்கள்
பொருட்களையும், ஏனையவற்றையும் பெற்றுக் கொள்ளும் போது எவ்வாறு நடந்து கொள்ள
வேண்டுமென்பதனை பாதுகாப்பு தரப்பினரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு தரப்பினருக்கு அம்பாரை
மாவட்டத்தில் பொது மக்கள் முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.
இன்று அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் மீன் மற்றும் இறைச்சி வகைகளை
கொள்வனவு செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கு பல சரக்கு கடைகளும் திறந்து
இருந்த போதிலும், ஒரு சில இடங்களில் திறக்கப்படவில்லை.
நிந்தவூரில் மேற்படி கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. இதனால், நிந்தவூர்
பிரதேச மக்கள் தமக்கான பொருட்களை வாங்குவதற்கு அயல் பிரதேசங்களுக்கு
படையெடுத்தார்கள்.
நிந்தவூரில் மீன் சந்தை, இறைச்சிக் கடைகள், பல சரக்கு கடைகள் என்பன நாளை
(30.03.2020) திறக்கப்படமாட்டாதென்று பள்ளிவாசல்களின் ஒலி பெருக்கிகள்
மூலமாக இரவு 10 மணியளவில்தான் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்கள்
பொருட்களை நடமாடும் வியாபாரிகளின் மூலமாக பெற்றுக் கொள்ளலாமென்று
அறிவிக்கப்பட்ட போதிலும், பொருட்கள் போதியளவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.
மேலும் பொது மக்கள் நெருக்கமாக கூடி நின்று பொருட்களை கொள்வனவு
செய்தார்கள். இதனால், பிரதேச செயலகத்தினால் செய்யப்பட்ட ஏற்பாடுகள்
வெற்றியளிக்கவில்லை. பொது மக்களை மேலும் அசௌகரியப்படுத்தும் வகையிலேயே
இருந்ததாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
சாய்ந்தமருதில் பிரதான வீதியில் உள்ள பலசரக்கு கடைகளில் பொருட்களை கொள்வனவு
செய்வதற்கு பொது மக்கள் இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் நின்று
கொண்டிருந்தார்கள். மாளிகைக்காடு கடற் கரையில் அமைந்துள்ள சகல மீன்
கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இக்கடைகளில் பொது மக்கள் அதிகம் சேராத
வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமைகளில்
ஈடுபட்டிருந்தனர்.
சாய்ந்தமருது பெண்கள் மீன் சந்தையில் ஒரு சில மீன் வியாபாரிகள் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று கடைகள்
திறக்கப்பட்டிருந்தன. மரக்கறி வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் பொருட்களை
வாங்குவதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.இதே வேளை, நடமாடும் வியாபாரிகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். வெங்காயம் ஒரு கிலோ 300 ரூபாவுக்கு விற்பனை செய்தார்கள். இதே வேளை, ஒரு சில தனியார் பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலும் ஈடுபட்டன.










0 comments:
Post a Comment