• Latest News

    March 23, 2020

    அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட பலர் தலைமறைவு

    யாழ்ப்பாணம், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட 11 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் சுகாதார அதிகாரிகள் அவர்களை தங்கள் வீடுகளிலேயே தடுத்து வைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த குடும்பங்கள் மன்னார் மடு நானாட்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    இவர்கள் கடந்த 15ஆம் திகதி அரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்.

    குறித்த சுவிஸ் போதகருக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் குறித்த 11 குடும்பத்தினரும் தாம் அந்த ஆராதனைகளில் கலந்து கொண்டதனை சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

    இந்த ஆராதனைக்காக 300 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட போதிலும் அங்கு அரைவாசிப் பேரை மாத்திரமே பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

    ஏனையவர்கள் தொடர்பில் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட பலர் தலைமறைவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top