இலங்கையில் புதிதாக மேலும் 7 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில்
ஆறு பேர் ஜா-எலயிலும் ஒருவர் தெஹிவளையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன் 270க்கும் அதிகமானோர் வைத்தியகண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை
நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட 7 நோயாளிகளும் ஒலுவில் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர
சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment