மைக்ரோசொப்ட் ஒபீஸ் பயனர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய
அபாயம் காணப்படுவதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை
விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பதற்றம் நிலவி வரும் இந்தக்
காலப் பகுதியில் சைபர் தாக்குதல் நடத்தும் குழுக்கள் இணைய வழியாக சைபர்
தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இரகசிய சேவையினால் இந்த விடயம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின்
மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருட்களில் ஒன்றான
மைக்ரோசொப்ட் ஒபீஸ் மென்பொருளின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைப்பது
போன்று ஓர் பிஸ்ஸிங் மெயில் (போலி மின்னஞ்சல்) ஒன்று அனுப்பி வைக்கப்படும்
என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் வேர்ட்,
மைக்ரோசொப்ட் எக்ஸல் உள்ளிட்ட மைக்ரோசொப்ட் ஒபீஸ் மென்பொருள் கோவைகளாக இந்த
மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இதனை திறந்து பார்ப்பதன் மூலம்
கணனியில் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
மின்னஞ்சல் வைரஸின் ஊடாக கணனிப் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும்
விபரங்கள் களவாடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment