• Latest News

    April 10, 2020

    24 மணி நேரத்தில் பதுங்கியிருந்த கொரனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் 49 பேரை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்

    இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

    24 மணி நேரத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் இவர்கள் சிக்கியதாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    49 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த நிலையில் மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதற்கமைய பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன வழங்கிய உத்தரவிற்கமைய இந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த 49 பேரின் பெயர் பட்டியலில் அதிகளவானோர் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரதேசத்தில் இருந்து 10 பேர் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

    அம்பாறையில் 4 பேரும், நுகேகொடயில் 4 பேரும், பதுளையில் 5 பேரும், சிலாபத்தில் 5 பேரும், களுத்துறையில் 3 பேரும், களனியில் 2 பேரும், குருணாகலில் 2 பேரும், அனுராதபுரத்தில் ஒருவரும். மாத்தறையில் இருவரும், குளியாப்பிட்டியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நபர்களில் 15 பேர் கட்டார் நாட்டிலும் மேலும் 15 பேர் இந்தோனிஷியாவிலும், 4 பேர் ஜோர்தான் நாட்டிலும், 8 பேர் சோமாலியா நாட்டிலும் 4 பேர் இந்தியாவில் இருந்தும் வந்துள்ளனர்.

    இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவரும், களுத்துறை பேருவளை பிரதேசத்தில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு இதுவரையில் உறுதி செய்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 24 மணி நேரத்தில் பதுங்கியிருந்த கொரனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் 49 பேரை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top