• Latest News

    April 10, 2020

    90 ஆண்டுகளின் பின்னர் உலக பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி - சர்வதேச நாணய நிதியம்

    கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்லும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

    1930 ஆம் ஆண்டு எதிர்நோக்கிய உலக பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் எதிர்நோக்க போகும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி இது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் அரைவாசி வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

    உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம், உலகம் முழுவதிலும் 81 சத வீத மனித வளத்தில் இயங்கும் 3.3 மில்லியன் தொழில் இடங்கள் தற்போது முழுமையாக அல்லது அறைகுறையாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்த பொருளாதார வீழ்ச்சியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த நாடுகளுக்கு பல பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகளை வழங்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஒக்ஸ்பார்ம் அமைப்பு எச்சரித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 90 ஆண்டுகளின் பின்னர் உலக பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி - சர்வதேச நாணய நிதியம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top