கொரோனா வைரஸ் தொற்று நோயின் போர்வையில் அரசாங்கம் தற்போது மக்களின்
அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறியுள்ளது என சஜித் பிரேமதாச தலைமையிலான
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
- அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க கையாண்டு வரும் வழிமுறையானது மிகவும் மோசமானது எனவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி கொரோனாவுக்கும் இனவாதத்தை பூசி வருவதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர்
ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை
முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு
விடுக்கப்படும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிராக கருத்துக்களை
அரசாங்க தரப்பு வெளியிட்டு வருகிறது.
அரசாங்கத்தின் உண்மை நிலைமை வெளியில் தெரியவருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே இந்த கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கொரோனா வைரஸ் போர்வையில் அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சித்து வருகிறது.
நாட்டின்
சாதாரண இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டது. மக்களின் அன்றாட
தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து
வேலைத்திட்டங்களையும் மிக மோசமாக அரசியல் மயப்படுத்தியுள்ளது.
- மக்களுக்கு வழங்கும் உணவு பொதிகளில் கட்சியின் சின்னத்தை அச்சிடும் அளவுக்கு அரசாங்கம் தரந்தாழ்ந்து போயுள்ளது. அரச கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் ஊடாக வழங்கும் உணவு பொதிகளிலேயே அரசாங்கத்தினர் தமது கட்சியின் சின்னத்தை அச்சிட்டுள்ளனர்.
அத்துடன் அத்தியவசிய உணவுப் பொருட்களை
விநியோகிக்கும் கட்டமைப்பு செயலிழந்துள்ளது. விசேட பொருளாதார மத்திய
நிலையங்கள் செயலிழந்துள்ளதன் மூலம் இது தெளிவாகியுள்ளது.
ஜனாதிபதி நியமித்த செயலணிக்குழு அரசியல் வேலைத்திட்டத்திற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா
வைரஸ் தொற்று பரவும் போது செய்ய வேண்டியதை செய்ய அரசாங்கம் தற்போது ஆமை
வேகத்தில் மெதுவாக செய்து வருகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்திகட்சி
குற்றம் சுமத்தியுள்ளது.
0 comments:
Post a Comment