முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம்
கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக்
காயப்படுத்திய சமுர்த்தி பயனாளி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09.04.2020)
கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை குறித்த பகுதியில்
பகிர்ந்தளிக்கும் போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே
சந்தேக நபர் , அந்த கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவருடைய
காதைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தால் காயமடைந்த உப தலைவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த உடப்பு பொலிஸார், உப
தலைவரின் காதை கடித்து காயப்படுத்தியதாக ௯றப்படும் அதே பகுதியைச் சேர்ந்த
சமுர்த்தி பயனாளியான குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், இன்று வெள்ளிக்கிழமை (10)
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி
வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment