நேற்று எனது நட்புப் பட்டியலில் இருக்கும்
பெளத்த சகோதர் ஒருவர், அல்குர் ஆனின் படம் ஒன்றுடன் "உலகின் மிகப்பெரிய
வைரஸ் இந்த சக்கிலி புத்தகமும், சக்கிலி மதமும்தான்" என்று ஒரு பதிவை
இட்டிருந்தார்.
பார்த்த உடன் மனதில் ஒரு வேதனை ஏற்பட்டாலும், அந்தப் பதிவில் போய் ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
பேஸ்புக், வட்சப்பில் இனவாதம் பேசுபவர்களை நாம் கண்டு கொள்ளவே தேவையில்லை.
ஒரு ஸ்மார்ட் போனைத்தவிர அவர்களிடம் எதுவும் இல்லை.
எல்லா அசிங்கங்களையும் லைக் செய்துகொண்டு,
எந்தக் கல்விப் பின்ணணியும் இல்லாத, வாழ்க்கை குறித்து எந்த இலட்சியுமும்
இல்லாத ஒரு கூட்டமே பேஸ்புக்கில் இனவாதம் பேசுபவர்கள்.
அவர்களது பதிவுகளையும் அவர்கள் பகிரும் செய்திகளையும் பார்த்து நாம் கவலைப்படவோ, பதில் சொல்லவோ தேவையில்லை.
உண்மையில் அவர்களது மன நிலையை நினைத்துதான் நாம் பரிதாப்படவேண்டும்.
அவர்கள் சிங்கள சமூகத்தினரிடத்தில்கூட எந்தவித பெறுமானமும் இல்லாதவர்கள்.
அப்படியான கூமுட்டைகள் முஸ்லிம் சமூகத்திலும் இருக்கிறார்கள், இவர்கள்தான் அமெரிக்காவில் கொரோனா இறப்பு வீதம் அதிகரிப்பு என்ற செய்தியின் கீழ் "மாஷா அல்லாஹ்" சொல்பவர்கள்.
Safwan Basheer
0 comments:
Post a Comment