• Latest News

    April 01, 2020

    ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து கொரோனாவை அழிக்கும் திறன் கொண்டதல்ல : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

    கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை ஜப்பானிலிருந்து இலங்கைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்டது.

    எனினும் இந்த மருந்து கொரோனாவுக்கு வெற்றிகரமான சிசிச்சை அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் Hydroxy chlroquine என்ற மருந்து பயன்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளார்.

    குறுகிய காலத்திற்குள் (சுமார் 15 நிமிடங்கள்) சோதனை நடைமுறைகள் மூலம் நோயாளியை உறுதி செய்யும் பரிசோதனைகள் தற்போது வரையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதனை இலங்கையினுள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து கொரோனாவை அழிக்கும் திறன் கொண்டதல்ல : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top