• Latest News

    January 11, 2021

    யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி - சட்டவிரோதமானது - கல்வி அமைச்சர்

    யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச் சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென ஒரு பொது விதி கூறுகிறது.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

    இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

    கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

    முள்ளிவாய்காலில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி இரவோடு இரவாக அகற்றப்பட்டமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி - சட்டவிரோதமானது - கல்வி அமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top